மாரடித்தல் என்பதன் பொருள்சேர்ந்து செயலாற்றல்
1. சொல் பொருள்
சேர்ந்து செயலாற்றல்
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
work, work as a team, Grief crying spells
3. சொல் பொருள் விளக்கம்
இறந்தாரை நினைத்து மகளிர் சிலர் பலர் கூடி மாரடிப்பது நம் நாட்டில் அண்மைக்காலம் வரை இருந்த வழக்கே. மாரடித்த கூலி மடி மேலே” என்பதும் “கூலிக்கு மாரடித்தல்” என்பதுவும் இந்நிலையை விளக்கும். ஒப்புக்காக அழும் ஒப்பாரி கூலிக்கு அன்று மாரடிப்பு கூலிக்கு உரியது. மாரடிப்பில் ஒருவர் முன்னே பாடி மாரடிக்கப் பின்னே பலர் பின்பாட்டோடு மாரடிப்பர். அப் பின்பாட்டும் முன்பாட்டும் தொடர்பு கொண்டு முழுமையாகும். தொடர்பு அமையா மாரடி அவலத்திற்கு மாறாக, நகைப்புக்கு இடமாகி விடும். அதனால், “உன்னோடு மாரடிக்கமுடியாது; நீ கெடுத்து விடுவாய்” என்பது வழக்கில் ஊன்றியது.
4. பயன்பாடு
“உன்னோடு மாரடிக்கமுடியாது; நீ கெடுத்து விடுவாய்”
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்