சொல் பொருள்
(பெ) 1. மழைக்காலம், 2. மழை, 3. மேகன், 4. மழை நீர்,
சொல் பொருள் விளக்கம்
மழைக்காலம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rainy season, the monsoon, rain, cloud, rain water
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாரி குன்றம் மழை சுமந்து அன்ன – பெரும் 49 மழைக் காலத்து மலை முகிலைச் சுமந்தாற் போன்று, மாரி வாய்க்க வளம் நனி சிறக்க – ஐங் 10/2 மழை காலம் தவறாமல் பெய்யட்டும்; வளம் மிகுந்து சிறக்கட்டும் மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண் தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் – கலி 131/21,22 கார்மேகமும் விரும்பும் கருங்கூந்தலையும், மதர்த்த பார்வையைக் கொண்ட அழகிய மைதீட்டிய கண்களையும், ஆழமான கடலில் பிறந்த முத்தின் அழகைப் போன்ற முறுவலையும் உடையவளே! குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன் சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை மாரி மொக்குள் புடைக்கும் நாட – ஐங் 275/1-3 குரங்குகளின் தலைவனான, நிறமுள்ள மயிரினைக் கொண்ட ஆண்குரங்கு பிரம்பின் அழகிய சிறிய கோலினைப் பற்றிக்கொண்டு, அகன்ற பாறையில் தேங்கியிருக்கும் மழைநீர்க் குமிழிகளை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்