சொல் பொருள்
1. (வி.வே) மார்பினையுடையவனே!,
2. (பெ) மார்பினையுடையவன்,
சொல் பொருள் விளக்கம்
மார்பினையுடையவனே!,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
oh! you with (a broad) chest!
(you) having your chest (smeared with sandal)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் நீ சில மொழியா அளவை – சிறு 232-235 ’வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்’ எனவும், ‘உழவர்க்கு நிழல்செய்த செங்கோலையுடையோய்’ எனவும், ‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்’ எனவும், நீ சில (புகழினைக்)கூறி முடிக்காத அளவில் ஆரம் கமழும் மார்பினை சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே – நற் 168/10,11 சந்தனம் கமழும் மார்பினையுடையவனாகிய நீ மலைச் சாரலிலுள்ள சிறுகுடியாகிய இவ்விடத்துக்கு நீ வருவது –
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்