1. சொல் பொருள்
(1) 1. பாண்டிய மன்னர்களின் சிறப்புப் பெயர்களிலொன்று,
2. பாண்டிய மரபைச் சேர்ந்த சங்க காலக் குறுநில மன்னன்,
2. சொல் பொருள் விளக்கம்
பாண்டிய மன்னர்களின் சிறப்புப் பெயர்களிலொன்று,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a title name of the Pandiya kings.
a chieftain of sangam period with Pandiya lineage
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் உரு கெழு கூடலவரொடு வையை வரு புனல் ஆடிய தன்மை பொருவும்_கால் – பரி 24/91-93 அச்சம் வரக்கூடிய கொல்லும் தொழிலையுடைய யானைகளையும், புடைத்த தோள்களையும் உடைய பாண்டியன் அழகு பொருந்திய தன் மதுரை மாந்தருடனே, வையையில் வருகின்ற நீரில் புனலாடிய தன்மையை ஒப்பிடுங்கால் மாறன் என்பது பாண்டியர் பெயர்களுள் ஒன்று. முடத்திருமாறன், பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன், இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், மாறன் வழுதி, கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, மாலைமாறன், ஆகியோர் மாறன் என்ற பெயர் கொண்ட சங்க காலப் பாண்டிய மன்னர்கள் பொய்யா நல் இசை நிறுத்த புனை தார் பெரும் பெயர் மாறன் தலைவனாக – மது 771,772 பொய்யாக்கப்படாத நல்ல புகழை உலகிலே நிறுத்தின, அலங்கரித்த மாலையினையும், பெரிய பெயரினையும் உடைய மாறன் (எனும் பழையன் தமக்குத்)தலைவனாயிருப்ப, இந்த மாறன் மோகூர்ப் பழையன் மாறன் எனப்படுவான். இவன் ஒரு குறுநில மன்னன். இவன் பாண்டிய மரபினன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனுக்கு நண்பன். இவன் அவையகத்தே இளம்பல் கோசர் என்பார் சிறந்த வீரராய்த் திகழ்ந்தனர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்