சொல் பொருள்
(பெ) ஒல்லையூர் தந்த பூதப்பண்டியன் அரசவையில் இருந்தவன்,
சொல் பொருள் விளக்கம்
ஒல்லையூர் தந்த பூதப்பண்டியன் அரசவையில் இருந்தவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a person in the chamber of council of a Pandiyan king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலி புகழ் வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் பொய்யா யாணர் மையல் கோமான் மாவனும் மன் எயில் ஆந்தையும் – புறம் 71/9-12 மிக்க புகழையுடைய வையையாற் சூழப்பட்ட செல்வம் பொருந்திய ஊர்களில் பொய்யாத புதுவருவாயையுடைய மையலென்னும் ஊர்க்குத் தலைவனான மாவனும் நிலைபெற்ற எயிலென்னும் ஊரையுடைய ஆந்தையும் இவன் பாண்டிய மன்னன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் நண்பர்களுள் ஒருவன். மாவன் என்னும் பெயர் குதிரையை உடையவன் என்ற பொருளைத் தருகிறது. எனவே இந்த மாவன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் குதிரைப்படைத் தலைவன் எனலாம் என்கிறது விக்கிப்பீடியா கட்டுரை.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்