சொல் பொருள்
(பெ) ஒரு சங்க கால ஊர்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்க கால ஊர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city during sangam period.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரு மாவிலங்கை தலைவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக்கோடனை உடையை – புறம் 176/6-8 பெரிய மாவிலங்கை என்னும் ஊர்குத் தலைவன், சிறிய யாழையுடைய வறியோர் தொடுக்கும் புகழ்மாலை சூடும் நல்லியக்கோடனைத் துணையாக நீ உடையை. இன்றைய திண்டிவனம் பகுதி சங்க காலத்தில் ஓய்மாநாடு என்று அழைக்கப்பட்டது. அந்த நாட்டை ஆண்ட ஓய்மான் நல்லியக்கோடன் என்ற அரசனின் தலைநகரம் மாவிலங்கை.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்