Skip to content

சொல் பொருள்

சுருண்டுகிட, வளை

சொல் பொருள் விளக்கம்

சுருண்டுகிட

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

lie down with a bent body

bend, curve

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய் – நற் 103/6

பசி வருத்துவதால் சுருண்டுகிடக்கும் பசிய கண்ணையுடைய செந்நாயின்,

மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி
நெறித்துவிட்டு அன்ன நிறை ஏரால் என்னை
பொறுக்கல்லா நோய் செய்தாய் – கலி 94/9,10

“சிறப்பான கலப்பையில் இறுக்கப்பட்ட கொழுவினைப் போல் முடங்கியும், மடங்கியும்
சுருட்டிவிட்டதைப் போன்ற நிறைந்த அழகால், எனக்குப்
பொறுக்க முடியாத காம நோயை ஏற்படுத்தினாய்!

கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி
முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி – அகம் 63/4,5

கடுமையான யானை தன் நீண்ட கையைச் சேர்த்து
வளைந்த காலால் உதைத்த பொன்துகள் கிளம்பும் புழுதியை

கூனலாக வளைந்திருக்கும் இறால் மீனை முடங்கு இறா என்று அழைக்கின்றன பல சங்கப்பாடல்கள்.

முடி வலை முகந்த முடங்கு இறா பாவை – நற் 49/3

முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை – நற் 211/5

முள் கால் இறவின் முடங்கு புற பெரும் கிளை – குறு 109/1

முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் – அகம் 220/17

துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை – அகம் 376/16

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *