சொல் பொருள்
நிறைவேறு, நிறைவேற்று, முடிச்சுப்போடு, கட்டு, சூடு, அணி, இறுதிநிலை அடை, முற்றுப்பெறு, நாற்றுக்கட்டு, முடிச்சு, கிரீடம், முடிச்சுப்போடுதல், மயிர்,
சொல் பொருள் விளக்கம்
நிறைவேறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be accomplished, accomplish, tie, fasten, make into a knot, put on, adorn, end, come to a close, terminate, bundle of (paddy) seedlings for transplantation, knot, crown, fastening into a knot, hair
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்னா அரும் படர் தீர விறல் தந்து இன்னே முடிக தில் அம்ம ——— ———————————— ————————— நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சிலரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறை தொழிலே – நெடு 167-188 தீதாக இருக்கின்ற ஆற்றுதற்கரிய துயரம் தீரும்படி, வெற்றியைக் கொடுத்து இப்பொழுதே முடிவதாக ————- ———————————– ———————— நள்ளென்னும் ஓசையையுடைய நடுயாமத்திலும் பள்ளிகொள்ளாதவனாய், ஒருசில வீரரோடு திரிதலைச் செய்யும் அரசன், பலரோடு மாறுபட்டுப் பொருகின்ற பாசறையிடத்துப் போர்த்தொழில் அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு அவண் நீடாதல் ஓம்பு-மின் – நற் 229/5,6 அதனால் செல்லுங்கள், சென்று பொருளீட்டும் வினையை முடியுங்கள், சென்றபின் அங்கு அவ்விடத்திலேயே நீண்டநாள் தங்காமல் காத்துக்கொள்ளுங்கள் துவர முடித்த துகள் அறும் முச்சி பெரும் தண் சண்பகம் செரீஇ – திரு 26,27 முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி இணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்த குல்லை இலை உடை நறும் பூ – திரு 200,201 பிணைக்கப்பட்ட மாலையினையும், சேர்த்தின கூந்தலையும் உடையராய், தலையிலே அணிந்த கஞ்சங்குல்லையினையும், இலையையுடைய நறிய பூங்கொத்துக்களையும், முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும் கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை – பரி 13/47,48 முடிந்துபோனதும், இனி முடியப்போவதும், இப்போது தோன்றியிருப்பதும் ஆகிய மூன்று காலங்களும் கடந்து, அவை பொருந்தப்பெற்ற உன் திருவடிகளின் நிழலில் உள்ளவை; கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் – பெரும் 210-212 கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில், (தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால் சமப்படுத்திய)உழவர் முடி(யாக வீசிய)நாற்றை அழுத்தி நட்ட நீண்டநாள் நிற்கும் நீரையுடைய வயலில் தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும் கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின் – பெரும் 273,274 தோள்களும் அமிழும் குளங்களினுடைய கரையைக் காத்திருக்கும், வளைந்த முடிச்சுகளையுடைய வலைகளையுடையோருடைய குடியிருப்பில் தங்குவீராயின் – கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின் முடி உடை கரும் தலை புரட்டும் முன் தாள் உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை – பட் 229-231 காவலையுடைய அரண்களைப் பிடித்த (கோட்டைக்)கதவை முறிக்கும் கொம்பினையும், கிரீடங்களையுடைய கரிய தலைகளை உருட்டும் முன்காலின் நகமுடைய அடிகளையும் கொண்ட உயர்ந்த அழகினையுடைய யானை, முடி முதிர் பரதவர் மட மொழி குறு_மகள் – நற் 207/9 வலையை முடிதலில் திறமைகொண்ட பரதவரின் மடப்பமுள்ள மொழியையுடைய இளமகள் வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினை பொறி அழி பாவையின் கலங்கி – நற் 308/6,7 மணங்கமழும் அடர்ந்த கூந்தல் அசைய, நல்ல வேலைப்பாடான, செலற்றுப்போன பாவையைப் போலக் கலங்கி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்