சொல் பொருள்
முட்டுப்படுதல் – வறுமை
சொல் பொருள் விளக்கம்
முட்டுப்படுதல் வறுமை, முட்டுப்பாடு என்பதும் அது. தட்டுப்பாடு என்பது சிற்றளவு வறுமை, முட்டுப்பாடு பேரளவு வறுமையாம். எங்கெங்கும் கேட்டும் எதுவும் பெறமுடியாமல் என் செய்வோம் எனத்தவிக்கும் வறுமையாம் இது. “இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு” என்னும் வறுமையும் “ நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடரிது” என்னும் வறுமையும் முட்டுப்பாடாம். முட்டு வீடு என்பது தாய் மகப்பேறு பெற்ற அறை. அதனைப் பெற என்ன பாடு படுவாளோ அப்பாடு முட்டுப்பாடு. அவ்வுயிர்ப் போராட்டத் துடிப்பை ஆக்குவது முட்டுப்பாடாம் வறுமை என்க.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்