சொல் பொருள்
முணங்கக் கொடுத்தல் – தாங்கமாட்டாத அளவு அடி தருதல்
சொல் பொருள் விளக்கம்
கொடுத்தல் என்பது கொடைமானம் என்பதால் திட்டுதலையும், கொடை என்பதால் அடித்தலையும் குறிக்கும். அடிபட்டவன் வலி தாங்க முடியாமல் முணங்குதல் கண்கூடு. அதனால் முணங்குதல் என்பது வலி தாங்க முடியாத அரற்றாக அமைந்தது. அவ்வரற்று அமையுமாறு அடித்தல் முணங்கக் கொடுத்தல் ஆயிற்றாம். இன்னும் இதனிற் கடியது முக்க முணங்கக் கொடுத்தல் எனப்படும். முணகுதல் சலித்தல், முணங்குதல் அரற்றுதல் என்னும் வேறுபாடு அறிக. “நன்றாக முணங்கக் கொடுத்து விட்டான்; இனி மற்றவர் வழியில் தலையிட்டு வரமாட்டான்” என்பது முணங்கப் பெற்றான் பெற்ற முணகலுக்கு முடிவுரை.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்