சொல் பொருள்
சோம்பல் முறித்தல்
சொல் பொருள் விளக்கம்
சோம்பல் முறித்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shaking of drowsiness or lazyness by stretching ones limbs
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இது முணங்கு நிமிர்தல் எனப்படுகிறது. இதனை மூரி நிமிர்தல் என்றும் அழைப்பர். தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி வியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து புலவு புலி புரண்ட புல் சாய் சிறு நெறி – அகம் 357/4-6 பெரிய கோட்டினையுடைய யானையை வலப்பக்கத்தே விழக் கொன்று அகன்ற பாறைகள் குருதியால் சிவக்கும்படி கிழித்திழுத்து வந்து சோம்பல் முறித்து புலால் நாறும்புலி கிடந்து புரண்டதால் புற்கள் சாய்ந்துகிடக்கும் சிறிய நெறிகள். அணங்கு அரும் கடும் திறல் என் ஐ முணங்கு நிமிர்ந்து அளை செறி உழுவை இரைக்கு வந்தன்ன – புறம் 78/2,3 வருந்துதற்கரிய மிக்கவலியையுடைய என் இறைவன் மூரி நிமிர்ந்து முழையின்கண் கிடந்த புலி தான் விரும்பியதோர் இரையை நோக்கி வந்தாற்போன்ற முணங்கு நிமிர்தல் மூரி நிமிர்தல். அஃதாவது தூங்கி எழுந்தவுடன் கைகளையும் உடம்பையும் நீட்டித் திமிர்விட்டுச் சோம்பலைப் போக்குதல் என்பார் ஔவை.சு.து. தம் உரை விளக்கத்தில்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்