சொல் பொருள்
முணவு, வெறு,
சொல் பொருள் விளக்கம்
முணவு, வெறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be averse, hostile
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வங்கா வரி பறை சிறு பாடு முணையின் செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து – நற் 341/1-3 வங்கா எனும் வீட்டுப்பறவையை ஓடவிட்டும், பறக்கவிட்டும் விளையாடி சிறிதுபோது இருத்தலை வெறுத்தலால் சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினால் செய்யப்பட்ட வட்டு எனும் விளையாட்டுக் கருவியை நாவில் தேய்த்து விளையாட்டாக இனிய நகை குறையாமல், பாலைக் குடித்து, வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ வைகு பனி உழந்த வாவல் – நற் 279/1-3 வேம்பின் ஒள்ளிய பழத்தை உண்டு வெறுத்து, இருப்பையின் தேனுள்ள, பால் வற்றிய இனிய பழத்தை விரும்பி, நிலைகொண்டிருக்கும் பனியில் வருந்திய வௌவால் பணை நிலை முணைஇய வய_மா புணர்ந்து திண்ணிதின் மாண்டன்று தேரே – ஐங் 449/2,3 கொட்டகையில் நிற்பதை வெறுத்த வலிய குதிரைகள் பூட்டப்பெற்று, திண்மையாக ஆயத்தமாக்கப்பட்டுள்ளது தேர்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்