சொல் பொருள்
ஒரு மலை
சொல் பொருள் விளக்கம்
ஒரு மலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a hill
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அதிரா யாணர் முதிரத்து கிழவ இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர் குமண – புறம் 158/25,26 தளராத புது வருவாயையுடைய முதிரமென்னும் மலைக்குத் தலைவனே உலகம் முழுவதிலும் விளங்குகின்ற தலைமையினையும் இயற்றப்பட்ட தேரினையுமுடைய குமணனே! இன்றைய முதுமலைக்குரிய சங்க காலப்பெயர் முதிரமலை. குமணன் என்னும் வள்ளல் சங்ககாலத்தில் இதன் அரசன்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்