சொல் பொருள்
முதிர்ச்சியடை, பழு, முற்று, பக்குவமடை, நன்கு வளர்ந்திரு
சொல் பொருள் விளக்கம்
முதிர்ச்சியடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
grow old, become ripe, mature, full-grown
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 45,46 பாறைநிலம் முதிர்வு பெற்ற குளிர்ந்த கடல் நிலைகுலைய உள்ளே சென்று, சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல் – பழம் முதிர் சோலை மலை கிழவோனே – திரு 317 பழம் முற்றின சோலைகளையுடைய மலைக்கு உரிமையை உடையோனாகிய முருகப்பெருமான் நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து – சிறு 51 தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்