சொல் பொருள்
முதுநிலம், வரண்ட பாழ் நிலம்
சொல் பொருள் விளக்கம்
முதுநிலம், வரண்ட பாழ் நிலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
barren tract, waste land
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உயவு நடை பேடை உணீஇய மன்னர் முனை கவர் முதுபாழ் உகு நெல் பெறூஉம் – நற் 384/4,5 வருத்தமிக்க நடையைக் கொண்ட பெண்புறா உண்பதற்காக, அரசர் போர் முனையில் கவர்ந்ததால் முதிரப் பாழ்பட்டுப்போன நிலத்தில் சிந்திக்கிடக்கும் நெல்மணியைக் கொத்திக்கொணரும் வெய்துற இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும் குடி பதிப்பெயர்ந்த சுட்டு உடை முதுபாழ் – அகம் 77/4-6 வெம்மை மிக இடிகளை உமிழும் மேகம் நீங்கி எவ்விடத்தும் குடிகள் தத்தம் பதிகளிலிருந்து பெயர்ந்து போகறு ஏதுவாக பலரும் சுட்டிக்கூறும் மிக்க பாழிடமாகிய பாலையில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்