சொல் பொருள்
பாண்டியநாட்டின் ஒரு பிரிவு
சொல் பொருள் விளக்கம்
பாண்டியநாட்டின் ஒரு பிரிவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a tract of land annexed by the Pandiya king from the vELir class
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர் குப்பை நெல்லின் முத்தூறு தந்த கொற்ற நீள் குடை கொடி தேர் செழிய – புறம் 24/21-23 பொன் அணிந்த யானையையுடைய பழைய முதிர்ந்த வேளிரது திரண்ட நெல்லினையுடைய முத்தூற்றுக் கூற்றத்தைக் கொண்ட வெற்றி பொருந்திய உயர்ந்த குடையினையும் கொடியால் பொலிந்த தேரினையும் உடைய செழியனே! இந்த முத்தூறு இப்போதுள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஊர். இந்த ஊரில் நெல் விளைச்சல் அதிகம். வேளிர் குடி மக்கள் இவ்வூரில் வாழ்ந்துவந்தனர். இவர்கள் இந்த ஊரில் தொன்றுதொட்டு வாழ்ந்துவருவதால் ‘தொன்முதிர் வேளிர்’ எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். மிழலை நாட்டைக் கைப்பற்றிய தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மிழலை நாட்டை வென்றபின் முத்தூறு நாட்டையும் கைப்பற்றினான். மிழலை என்பது இக்காலத்தில் திருவீழிமிழலை என வழங்கப்படுகிறது. மாங்குடி கிழார் (மாங்குடி மருதனார்) என்னும் புலவர் இந்த வெற்றியைப் பாடியுள்ளார். சங்ககாலத்தில் வேளிர் முத்தூற்றுக் கூற்றத்துத் துவரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தனர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்