1. சொல் பொருள்
(பெ) 1. துறைமுகம், 2. ஆற்றில் இறங்குமிடம்,
2. சொல் பொருள் விளக்கம்
துறைமுகம்,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
place where one gets into a river
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தீம் புகார் திரை முன்துறை தூங்கு நாவாய் துவன்று இருக்கை – பட் 173,174 (கண்ணுக்கு)இனிதான புகாரிடத்து அலைகளையுடைய துறையின் முன்னே, அசைகின்ற (நெருக்கமாய் நின்று காத்திருக்கும்)மரக்கலங்களின் நெருக்கமான இருப்பினில், முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை – நற் 23/6 திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை – குறு 128/2 நெடும் தேர் காரி கொடுங்கால் முன்துறை பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் – அகம் 35/15,16 முதுநீர் முன்துறை முசிறி முற்றி – அகம் 57/15 திரு மா வியல் நகர் கருவூர் முன்துறை – அகம் 93/21 புன்னை அம் கானல் புறந்தை முன்துறை – அகம் 100/13 அடு போர் வேளிர் வீரை முன்துறை – அகம் 206/13 பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை – அகம் 226/8 தெண் திரை பரப்பின் தொண்டி முன்துறை – அகம் 290/13 தண் புனல் வாயில் துறையூர் முன்துறை – புறம் 136/25 திருமருத முன்துறை சேர் புனல் கண் துய்ப்பார் – பரி 7/83 திருமருத முன்துறை என்ற பெயர்கொண்ட துறையைச் சேரும் வையை நீரில் குளித்து இன்புறுவாரின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்