Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கருத்து, எண்ணம், 2. குறிப்பு

சொல் பொருள் விளக்கம்

கருத்து, எண்ணம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

thought, intention, sign, gesture

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நின் நசை வேட்கையின் இரவலர் வருகுவர் அது
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்
இன்மை தீர்த்தல் வன்மையானே – புறம் 3/24-26

நின்பால் நச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர், அங்ஙனம் வருவது
அவர் மனக்குறிப்பை அவர் முகத்தால் அறிந்து அவருடைய
வறுமையைத் தீர்த்தலை வல்ல தன்மையான்

எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை – கலி 61/7

“ஏடா! நீ உன் குறிப்பினால் ஏதோ ஒன்றைக் கூறவிரும்புவது போல் காட்டிக்கொள்கிறாய்!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *