சொல் பொருள்
(பெ) 1. முரல் என்ற சொல்லின் அடியாகப் பிறந்த பெயர்ச்சொல், முரலுதல், பார்க்க : முரல், 2. தாள வகை
சொல் பொருள் விளக்கம்
முரல் என்ற சொல்லின் அடியாகப் பிறந்த பெயர்ச்சொல், முரலுதல், பார்க்க : முரல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a time-measure
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி நசையினன் வதிந்த கிடக்கை பாணர் நரம்பு உளர் முரற்கை போல இனிதால் அம்ம பண்பும்-மார் உடைத்தே – ஐங் 402 புதல்வனை அணைத்துக்கொண்டிருக்கும் தாயின் முதுகைத் தழுவிக்கொண்டு ஆசையுள்ளவனாகப் படுத்திருந்த படுக்கைநிலை, பாணர் யாழின் நரம்புகளை மீட்டும் இனிய இசையினைப் போல இனிமையானது, இதுதான் இல்லறத்தின் இயல்பும் ஆகும். இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனைமின் – மலை 390,391 கேட்போர்)மகிழ்ச்சி அடையும் தாளக்கட்டுடைய உம்முடைய பாட்டு (நடுகல் வீரருக்கு)விருப்பமாய் அமைய தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும் வழக்கத்தில் உம்முடைய கொம்பை(யும்) வாசித்து விரைவீராக –
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்