சொல் பொருள்
1. (வி) 1. துண்டாகு, ஒடி, 2. துண்டாக்கு, ஒடி,
2. (பெ) 1. இளந்தளிர், 2. கொழுந்து இலை, 3. பாதித் துண்டு,
எழுதும் ஏடு
அறை
தேங்காயை இரண்டாக உடைப்பர். உடைந்த பகுதியை முறி என்பது வழக்கு.
சொல் பொருள் விளக்கம்
எழுதும் ஏட்டை முறி என்பது பொது வழக்கு. ஆனால் முறி என்பதற்குக் குமரி வட்டாரத்தார் ‘அறை’ எனப் பொருள் வழங்குகின்றனர். நெடிய வீட்டுப் பரப்பைப் பகுதி பகுதியாக அறுப்பது அறை எனப்படுவது போல முறிப்பதால் முறி எனப்பட்டது. அறையும் முறியும் கை கோக்கின்றன அல்லவா! ‘தறி’ என்பதும் தான் கூடி நிற்க வரவில்லையா?
தேங்காயை இரண்டாக உடைப்பர். உடைந்த பகுதியை முறி என்பது வழக்கு. கண்ணுள்ள பகுதியைப் பெண்முறி என்றும், கண்ணில்லாப் பகுதியை ஆண்முறி என்றும் கூறுவர். முறியின் உடைவில் கூட நலம் பொலம் பார்க்கும் நம்பிக்கை உண்டு. இவை தென்னகப் பொது வழக்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
break, snap, break apart, rupture, shoot, sprout, tender leaf, half piece, half broken bit
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் – புறம் 347/4 பகைவரை எறிந்து இலை முறிந்து வடுப்பட்ட வாயையுடைய வேலினையும் பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை – அகம் 141/17,18 பெரிய வயலில் விளைந்த நெல்லின் வளைந்த கதிர்களை ஒடித்து பசிய அவலாகக்குற்றும் கரிய வயிரமாகிய உலக்கையின் நறிய நல்லோள் மேனி முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே – குறு 62/4,5 நறுமணமுள்ள நல்லோளது மேனி, இளந்தளிரினும் மென்மையானது, தழுவுதற்கும் மிக்க இனியது தழலும் தட்டையும் முறியும் தந்து இவை ஒத்தன நினக்கு என பொய்த்தன கூறி அன்னை ஓம்பிய ஆய் நலம் என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே – குறு 223/4-7 கிளிகளை விரட்டும் தழலும், தட்டையும் ஆகிவற்றோடே கொழுந்தான தழையும் தந்து இவை உனக்குப் பொருந்துவன என்று பொய்யானவற்றைக் கூறி அன்னை பாதுகாத்த ஆய்வதற்குரிய பெண்மை நலத்தை தலைவன் கவர்ந்துகொண்டான், நாம் இப்படியானோம் இப்பொழுது. ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் வாழை பூவின் வளை முறி சிதற – புறம் 237/10,11 மாறிமாறி வெய்தாக மார்பின்கண் அரைந்துகொண்ட மகளிர், வாழைப்பூவினைப் போல வளையல்களின் துண்டுகள் சிதற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்