சொல் பொருள்
(வி) 1. முயங்கு, தழுவு, 2. உட்செல், நுழை
சொல் பொருள் விளக்கம்
முயங்கு, தழுவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
embrace, enter, pierce
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாழ் நறும் கதுப்பில் பையென முள்கும் அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது – நற் 337/8,9 தாழ்ந்து இறங்கும் நறிய கூந்தலில் துயின்று மெல்ல முயங்கும் அரிதாய்க் கிடைக்கும் பெரிய பயனைக் கொள்ளாது அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது பணைத்த பகழி போக்கு நினைந்து கானவன் – நற் 165/1,2 மருண்ட பார்வையையுடைய காட்டுப்பசுவின் அரிய மார்பினில் பாயாது குறிதப்பிய அம்பின் போக்கை நினைத்துப்பார்த்த கானவன், விரை பரி புல் உளை கலிமா மெல்லிதின் கொளீஇய வள்பு ஒருங்கு அமைய பற்றி முள்கிய பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப – அகம் 234/3-6 விரைந்த செலவினையுடைய புல்லிய பிடரி மயிரினையுடைய செருக்கு வாய்ந்த குதிரைகளை மென்மையுறப் பூட்டிய கடிவாள வாரினை ஒரு பெற்றியமையப் பற்றி நிலத்தே பதிந்த பல ஆரங்களையுடைய உருளை மென்னில வழியை அறுத்தே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்