சொல் பொருள்
(பெ) முழவை இயம்புவோன்,
சொல் பொருள் விளக்கம்
முழவை இயம்புவோன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the person who beats the drum called ‘muzhavu’
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் பல் கிளை தலைவன் கல்லா கடுவன் பாடு இமிழ் அருவி பாறை மருங்கின் ஆடு மயில் முன்னது ஆக கோடியர் விழவு கொள் மூதூர் விறலி பின்றை முழவன் போல அகப்பட தழீஇ இன் துணை பயிரும் குன்ற நாடன் – அகம் 352/1-7 வளைதல் மிக்க பலாமரத்தின் குடம் போன்ற பெரிய பழத்தினை பல சுற்றத்திற்குத் தலைவனாகிய கல்லாத ஆண்குரங்கு மிக ஒலிக்கும் அருவியையுடைய கற்பாறையிடத்தே ஆடுகின்ற மயில் ஒன்று தனக்கு முன்னே நிற்க, கூத்தர் விழாவினைக்கொண்டாடும் முதிய ஊரில் விறலியின் பின்பு நிற்கும் முழவு இயம்புவோன் போலத் தன்னகத்தே பொருந்தத் தழுவிக்கொண்டு இனிய துணையாய பெண்குரங்கினை அழைக்கும் மலைநாட்டையுடைய நம் தலைவன் எனவே முழவு என்பது பலாப்பழத்தைப் போன்றது என்பது பெறப்படும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்