சொல் பொருள்
நாசி, வண்டிப் பாரின் தலைப்பகுதி, இலை,காய்,கனி ஆகியவற்றின் காம்பு
சொல் பொருள் விளக்கம்
நாசி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
nose
Nose-shaped end of the pole of a cart
stem or base of a leaf or fruit
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற – நற் 149/2,3 மூக்கின் உச்சியில் சுட்டுவிரலை வைத்து தெருவில் பெண்டிர் கிசுகிசுப்பாய்ப் பழிச்சொற்களால் தூற்ற உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை – அகம் 53/8 உள்ளிருக்கும் ஊன் வாடிப்போன சுருண்ட மூக்குள்ள சிறிய நத்தைகள் கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப – புறம் 249/1 கதிர் நுனை போலும் மூக்கையுடைய ஆரல் மீன் சேற்றின் கீழே செருக காடி வைத்த கலன் உடை மூக்கின் மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப – பெரும் 57,58 காடி வைத்த மிடாவினுடைய மூக்கணை மீதிருந்து, குழவியைக் கைக்கொண்ட பெண் எருத்தை முதுகிலே அடிப்ப கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என – நற் 372/2-4 கடற்கரைச் சோலையின் பனையின் தேனையுடைய மிக முதிர்ந்த பழம் வளமையான இதழ்களையுடைய நெய்தல் பூ வருந்தும்படியாக, காம்பு இற்று குழைவான கரிய சேற்றில் ஆழமாகப் புதைந்துபோகுமாறு வீழ்ந்ததாக, நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த ஈர்ம் தண் பெரு வடு – ஐங் 213/1,2 நறிய வடுக்களையுடைய மாமரத்திலிருந்து காம்பு அற்றுப்போய் உதிர்ந்த பசுமையான குளிர்ந்த பெரிய வடுக்களை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்