சொல் பொருள்
மூக்குச் சீந்தல் – கவலைக்கு உள்ளாதல், அழுது அரற்றல்
சொல் பொருள் விளக்கம்
அழும் ஒருவர்க்குக் கண்ணீர் சிந்துவதுடன் மூக்கும் ஒழுகலாகும். அதனைச் சீந்தல் என்பர். அதனால் மூக்குச் சீந்தல், அழுதல், கவலை ஆகிய பொருள்களுக்கு உள்ளாயிற்று. தகுமம் பற்றலாலும் மூக்குச் சீந்தல் நேரும். எனினும் அதனை விலக்கிக் கவலைப் பொருளாதல் வழக்குச் சொல்லாயிற்று. “அழுத கண்ணும் சீந்திய மூக்குமாக” என்பது மரபுத் தொடராக உள்ளமை இப்பொருளை வலியுறுத்தும். ஒன்றைச் சொன்னால் உடனே மூக்கைச் சீந்துவாயே” என்பதில் இப்பொருண்மை உண்மை தெளிவாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்