சொல் பொருள்
மொய்
சூழ்
சொல் பொருள் விளக்கம்
மொய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
swarm around
throng, gather around
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முடலை யாக்கை முழு வலி மாக்கள் வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து துவலை தண் துளி பேணார் – நெடு 32-34 முறுக்குண்ட உடம்பினையும், மிகுந்த உடற்பலமும் உடைய மிலேச்சர் வண்டுகள் மொய்க்கும் கள்ளினை மிகுதியாக உண்டு, களிப்பு மிக்கு, தூரலாக விழும் குளிர்ந்த துளியைப் பொருட்படுத்தாமல் நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி எறும்பும் மூசா இறும்பூது மரபின் – பதி 30/37,38 இரத்தம் தூவிய நிறைந்த கள்ளுடனான பெரிய பலியானது எறும்புகளும் மொய்க்காத வியப்புத்தரும் முறைமையினை யுடையதாக ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின் வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல் – மது 716-718 ஒள்ளிய வடமாகிய முத்துச் சூழ்ந்த மார்பினில், வரிகளுள்ள பின்பகுதியையுடைய தேனினம் சூழ்வனவாய் மொய்ப்ப, கழுத்திலிருந்து தாழ்ந்த (பல்விதமாய்)கலந்த பூக்களைத் தெரிவுசெய்து கட்டிய மாலையினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்