சொல் பொருள்
மூடம் – கதிரோனை முகில் மறைத்துக் கொண்டிருத்தல்
சொல் பொருள் விளக்கம்
மூடம், அறிவின்மை எனப்படும். அறிவொளியை அறியாமை மூடியிருத்தலால் அவ்வாறு வழங்கப்படுகிறது என்பர். வானத்து மூடம், கதிரொளி தெரியாமல் முகிலால் மூடப்பட்டிருப்பதாம். மூட்டம் என்பது மாந்தரால் போடப்படுவதாம். வாழைக்காயைப் பழுக்க வைக்கப் புகை மூட்டம் போடுவது வழக்கு. பாலடுப்பிற்கு உமி மூட்டம் போட்டுக் கொழுந்துவிட்டு எரியாமல் மூடுவதும், பானை சட்டி வேக வைக்க மூட்டம் போடுவதும்
உண்டு.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்