Skip to content

மூட்டை கட்டல்

சொல் பொருள்

மூட்டை கட்டல் – புறப்படல்

சொல் பொருள் விளக்கம்

ஓர் ஊரில் இருந்து வேற்றூர் செல்வார் தோட்கோப்புக் கொண்டு செல்லல் முந்தை வழக்கு. தோட்கோப்பு ‘கட்டு சோறு’ எனவும் வழங்கும். சோற்று மூட்டை என்பதும் அது. சோற்று மூட்டை கட்டினால் வேற்றூர்ச் செலவுண்டு என்பது வெளிப்படை. இனி வேற்றூரில் நிலையாகத் தங்கச் செல்வார் தம் உடைமைகளை மூட்டை கட்டிக்கொண்டு போதல் உண்டு. பெட்டியில் போட்டாலும், உந்துகளில், தொடரிகளில் கொண்டு சென்றாலும் மூட்டை முடிச்சுகளே அவை. ஆதலால் மூட்டை கட்டல் என்பது இடம் விட்டுப் புறப்படல் பொருளில் வழங்குகின்றது. ஓயாது இடமாறிச் செல்வார். “மூட்டை கட்டுவதே என் பிழைப்பாகிவிட்டது” என்பதுண்டு.

இது ஒரு வழக்குச் சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *