சொல் பொருள்
இடுப்பு
சொல் பொருள் விளக்கம்
இடுப்பு என்பதைக் கருங்குளம் வட்டாரத்தார் மூணாரம் (மூன்று ஆரம்) என வழங்குகின்றனர். எத்தகைய அரிய ஆட்சி என்பது பொருளறிந்தால் புலப்படும். இடுப்பில் உள்ளாடை ஒன்று; மேலாடை ஒன்று; அதன் மேற்காப்பாக ஒட்டியாணம் என்றும் இடைவார் என்றும் அணிவன மற்றொன்று இம் மூன்று ஆரம் (சுற்றுக்கட்டு, பாதுகாப்பு) இருப்பதால் மூணாரம் எனப்பட்டது. பொது மக்கள் பார்வை, புலமக்கள் பார்வையை வெல்லும் திறச் சான்றுகளுள் ஒன்று இஃதாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்