Skip to content

சொல் பொருள்

பழங்குடி, பழமையான் வீடு, பழமையான மறக்குடி

சொல் பொருள் விளக்கம்

பழங்குடி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ancient family, very old house, Ancient warrior-tribe

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி – நற் 367/6

மூதில் மகனாகிய அருமன் என்பவனின் பெரும்புகழ்பெற்ற சிறுகுடி என்ற ஊரைப் போன்ற
மூதில் – தொல்குடி என்னும்பொருட்டு – ஔவை.சு.து.உரை விளக்கம்.

சிவந்த காந்தள் முதல் சிதை மூதில்
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்
புல் இலை வைப்பில் – பதி 15/11-13

சிவந்த காந்தள் வேரொடு காய்ந்தழிந்திருக்கும் பாழ் வீடுகளில்
புலால் நாறும் வில்லேந்தி உயிர்க்கொலை புரியும் புல்லிய மறவர் உறையும்
பனையோலைகளே வேய்ந்த ஊர்களையுடைய
ஔவை.சு.து.உரை

மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி – புறம் 19/15

முதிய மறக்குடியில் பிறந்த பெண்டிர் இன்புற்று உவகையால் அழ
ஔவை.சு.து.உரை

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதில் மகளிர் ஆதல் தகுமே – புறம் 279/1,2

இவளது சிந்தை கெடுக, இவளது துணிவு அச்சம்பொருந்தியதாகவுள்ளது
இவள் முதிய மறக்குடியில் பிறந்த மகளாமெனல் தக்கதே
ஔவை.சு.து.உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *