சொல் பொருள்
நெய்தல் நிலம், மருதநிலம், முல்லை நிலம்
சொல் பொருள் விளக்கம்
நெய்தல் நிலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
coastal tract, agricultural tract, pastoral tract
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம்ம வாழி தோழி நன்றும் எய்யாமையின் ஏது இல பற்றி அன்பு இலன் மன்ற பெரிதே மென்புல கொண்கன் வாராதோனே – ஐங் 119 கேட்பாயாக, தோழியே! திருமணத்திற்குரிய நல்ல வழிகளை அறியாமையினால், அதற்கு ஏதுவானவைகளைத் தவிர மற்ற வழிகளைப் பற்றிக்கொண்டிருப்பதால் நம்மீது அன்பு இல்லாதவன், தெளிவாக, பெரிதும் – மென்புலமாகிய நெய்தல் நிலத்துக்குரிய தலைவன் – நம்மை மணந்துகொள்ள இன்னும் வராதவன் ஐங்குறுநூறு – நெய்தல்திணைப் பாடல் மென்புலத்து வயல் உழவர் வன்புலத்துப் பகடுவிட்டு – புறம் 395/1,2 மென்புலமாகிய மருத நிலத்து வயல்களில் தொழில்புரியும் உழவர் வன்புலமாகிய முல்லைநிலத்தில் தம் எருதுகளை மேயவிட்டு அம் சிறை வண்டின் அரி_இனம் மொய்ப்ப மென்புல முல்லை மலரும் மாலை – ஐங் 489/1,2 அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டுகளின் அரித்தெழும் ஓசையினைக் கொண்ட கூட்டம் மொய்க்கும்படி, மென்மையுடைய நிலமாகிய முல்லை நிலத்தின்கண் முல்லைப்பூக்கள் மலர்கின்ற மாலைப்பொழுது ஐங்குறுநூறு – முல்லைத்திணைப் பாடல் – பொ.வே.சோ – உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்