சொல் பொருள்
உயரமான இடம், மேலே, மேல்நோக்கி
சொல் பொருள் விளக்கம்
உயரமான இடம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
elevated place, over, on, upward
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி – மது 486 கண் பார்க்கும் விசையைத் தவிர்க்கும்படி மேல்நிலம் உயர்ந்து – நச்.உரை நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி – மது 486 கண் பார்வைக்கு நேரே இல்லாது மேல் உயர்ந்து இருந்தன – ச.வே.சு.உரை பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை ஐய சிறு கண் செம் கடை சிறு மீன் மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும் – நற் 91/2-7 ஓசை முழங்குகின்ற குளிர்ந்த கடலில் துழாவித் தன் பெடையோடு சேர்ந்து இரையைத் தேடும் அகன்ற பாதங்களையுடைய நாரை மெல்லிய சிறுகண்ணில் சிவந்த கடைக்கண்ணையுடைய சிறிய மீன்களைப் பிடித்து மேலே ஓங்கி உயர்ந்த கிளையின் மீதிருக்கும் கூட்டிலிருந்து தாயை அழைக்கும் குஞ்சுகளின் வாய்க்குள் கொடுக்கும் – மேக்குயர்தல் – மேலோங்கி உயர்தல் : ஔவை.சு.து.உரை விளக்கம் மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை – குறு 26/2 மேலே வளர்ந்த பெரிய கிளையில் இருந்த மயிலானது – உ.வே.சா உரை மேக்கு எழு பெரும் சினை ஏறி கண கலை கூப்பிடூஉ உகளும்- அகம் 205/21,22 மேல் நோக்கி எழுந்த பெரிய கிளையில் ஏறி கூட்டமாய ஆண் குரங்குகள் தன் இனங்களைக் கூப்பிட்டுத் தாவும் – ந.மு.வே.நாட்டார் உரை மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என – புறம் 143/2 மழை மிகப் பெய்தலான் அப் பெயல் அமைந்து முகில் மேலே போவதாக வேண்டுமென – ஔவை.சு.து.உரை.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்