சொல் பொருள்
மேடு – மேட்டு நிலம்
தாவு – தாழ்வு நிலம்
சொல் பொருள் விளக்கம்
நிலம் மேடு தாவாகக் கிடந்தால் சமனிலைப்படுத்துதல் முதல் வேலையாம். அதனைப் பண்படுத்துதல் அடுத்த வேலையாம். நன்செய் நிலமெனின் மேடு தாவுகளைத் தனித்தனிக் குண்டுகளாகப் பிரித்துக் கொள்வது வழக்கம். மலைநிலத்து வேளாண்மை மேடு தாவுகளில் அதனதன் நிலைக்குத் தகச் சமப்படுத்தி வரப்பமைத்துச் செய்யப்படும். வாழ்வில் ‘மேடுதாவு’ உண்டு. அதனைச் சமப்படுத்திக் கொள்ள திட்டமும் திறமும் கட்டாயம் வேண்டும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்