சொல் பொருள்
மேனித்து – உழையாமை
சொல் பொருள் விளக்கம்
குனியாமல் வளையாமல் (வேலையின்றித்) திரிவதை மேனித்தாகத் திரிதல் என்பர். “மேல் வலிக்காமல் சாப்பிட வேண்டும், அவ்வளவுதான் வேலை” என்பது மேனித்தரைப் பற்றிச் சொல்லும் வசையுரை. மேனிற்றல் மேனிற்று மேனித்து என ஆகியிருக்கலாம். மேனிற்றலாவது மிதத்தல் என்பதாம். “அவன் மிதப்பில் திரிகிறான்” என்னும் வழக்குச் சொல் இதனை விளக்கும். மிதப்பில் திரிதல் என்பது ஆங்கும் இங்கும் அலைதல், ஆழ்ந்து ஒன்றிலும் ஈடுபடாதிருத்தல் என்பவற்றைக் குறிப்பதாம். மேனி குலுங்காமல் இருக்க வேண்டும் என்பதே அவன் நோக்கம் என்பதும் இவ்வழிப்பட்டதே.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்