சொல் பொருள்
மேவிய என்பதன் திரிபு – பொருந்திய; மேவிய என்பதன் திரிபு – தோன்றிய, வெளிப்படுத்திய; மேவிய என்பதன் திரிபு – தங்கிய, நிலைகொண்ட; மேய் என்ற வினைச்சொல்லின் எச்சம்
சொல் பொருள் விளக்கம்
மேவிய என்பதன் திரிபு – பொருந்திய
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
attached, change of one letter into another in syntactic coalescence of the word ‘meviya’, disclose, make known, abiding
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிரியினும் பிரிவது அன்றே நின்னொடு மேய மடந்தை நட்பே – ஐங் 297/3,4 நீ பிரிந்து சென்றாலும் அவளைவிட்டுப் பிரிவதில்லை, உன்னோடு பொருந்திய அந்த மடந்தையின் நட்பு. – ஔவை.சு.து.உரை தொன் முது கடவுள் பின்னர் மேய வரை தாழ் அருவி பொருப்பின் பொருந – மது 41,42 பழமை முதிர்ந்த கடவுளாகிய சிவபெருமானின் வழித்தோன்றிய பக்க மலையில் வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனாகிய வீரர் பெருமானே – பொ.வே.சோ-உரை மாயோன் மேய ஓண நன்_நாள் – மது 591 திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளிடத்தே – உயிர்கள் பிறப்பது போலன்றித் தானே பிறத்தல் வேண்டும் எனக்கருதி வந்து பிறப்பன் என்பது தோன்ற மேய என்றார். – பொ.வே.சோ-உரை விளக்கம் படு மணி யானை நெடியாய் நீ மேய கடி நகர் சூழ் நுவலும்_கால் – பரி 19/28,29 ஒலிக்கின்ற மணிகளைக்கொண்ட யானையையுடைய நெடியவனே! நீ எழுந்தருளிய (கோயில்கொண்டிருக்கும்) திருக்கோயிலைச் சுற்றிவருதலைச் சொல்லும்போது; இழிபு அறியா பெரும் தண் பணை குரூஉ கொடிய எரி மேய நாடு எனும் பேர் காடு ஆக – மது 154-156 குன்றுதல் அறியாத பெரிய மருதநிலங்களை (செந்)நிறக் கொழுந்துகளையுடைய நெருப்பு மேய்ந்துவிட, நாடு என்னும் பெயர்(போய்) காடு என்னும் பெயராக,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்