சொல் பொருள்
பசு, மான் போன்றவை, புல், இலை, தழை ஆகியவற்றை உண்ணு,
விலங்குகள் உணவுகொள்ளு,
காய்ந்து போன புல் ஆகியவற்றைத் தீ பொசுக்கு,
சொல் பொருள் விளக்கம்
பசு, மான் போன்றவை, புல், இலை, தழை ஆகியவற்றை உண்ணு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
graze, feed, (fire) burn dry grass to ashes
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை – சிறு 42 இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை – நற் 265/1,2 காய்ந்து இறுகிப்போன கொல்லையில் மேய்ந்த, உதிர்ந்த கொம்பினையுடைய, முதிர்ச்சியையுடைய சேற்றில் குளித்தெழுந்த, புள்ளியையும் வரியையும் கொண்ட கலைமானை மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி – ஐங் 261/1 முருங்கை மேய்ந்த பெரும் கை யானை – அகம் 167/11 நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி – புறம் 132/4 வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் – அகம் 6/18 வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய் வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி – நற் 54/1-4 சங்குகள் உள்ள கடல்நீரில் இரைதேடி, உன் சுற்றமுதலானவருடன் சென்று சிறகுகளை விரித்து உயரப் பறக்க எழும்புவதை விரும்பினாயெனினும், தூய சிறகுகளுடன் மிக்க புலவைத் தின்னும் உன் கிளையுடன் சற்றுத் தாமதித்து, கரிய காலைக் கொண்ட வெண்ணிறக் குருகே! நான் சொல்வதைக் கேட்பாயாக! ஒள் எரி மேய்ந்த சுரத்து இடை – ஐங் 356/3 ஒளிரும் நெருப்பு சுட்டுக் கருக்கிய தீர்த்த பாலை வழியிடையே எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய் பொரி மலர்ந்து அன்ன பொறிய மட மான் திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட – கலி 13/2-4 நெருப்பு பரவலாய்ச் சுட்டதினால் கரியாகி வறண்டு போன நிலத்தில் பசித்த வாய்க்குப் பச்சை இலை கிடைக்காதவையாய் பொரிகள் விரிந்து கிடப்பதைப் போன்ற புள்ளிகளையுடைய இளைய மான் முறுக்கிய கொம்புகளையுடைய தன் ஆண்மானோடு பொய்த்தேர் எனப்படும் கானல் நீரைப் பார்த்து ஓட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்