சொல் பொருள்
ஏழு தீவுகளின் மத்தியிலுள்ளதும் கிரகங்கள் சுற்றிவருவதாகக் கருதப்படுவதுமான பொன்மலை.,
சொல் பொருள் விளக்கம்
ஏழு தீவுகளின் மத்தியிலுள்ளதும் கிரகங்கள் சுற்றிவருவதாகக் கருதப்படுவதுமான பொன்மலை.,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Mt.Meru, a mythical golden mountain round which the planets are said to revolve,
believed to be the centre of the seven concentric continents.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுடரொடு சூழ்வரு தாரகை மேரு புடை வரு சூழல் புலம் மாண் வழுதி மட மயில் ஓரும் மனையவரோடும் கடன் அறி காரிய கண்ணவரோடும் நின் சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல் பாடு வலம் திரி பண்பின் பழ மதி சூடி அசையும் சுவல் மிசை தானையின் பாடிய நாவின் பரந்த உவகையின் நாடும் நகரும் அடைய அடைந்து அனைத்தே – பரி 19/19-26 திங்கள் தன்னோடு சூழ்ந்துவரும் விண்மீன்களோடு மேருவின் பக்கத்தே சுற்றிவரும் சூழலானது – அறிவிற் சிறந்த பாண்டியன் இளமையான மயில் போன்ற தன் மனைவியரோடும், தமக்குரிய கடமைகளை நன்கு அறிந்து செயல்படும் கண்களைப் போன்ற அமைச்சர்களோடும், உன் சூரர மகளிர் வாழும் குன்றின் உயர்ந்த மலையில் ஏறி, மேலே பெருமையுண்டாக வலமாக வருகின்ற பண்பினோடே, பழமைச் சிறப்புள்ள் மதியினைச் சூடியவனாய், அசைகின்ற, தோள்மீதுள்ள துகிலினை உடையவனாய், உன்னைப் புகழ்ந்து பாடும் நாவினையுடையவனாய், மிகுந்த மகிழ்ச்சியுடையவனாய், நாட்டிலுள்ளோரும், நகரத்திலுள்ளோரும் வந்து நெருக்கமாய்ச் சூழ்ந்திருப்பதை ஒத்தது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்