சொல் பொருள்
மேலிடத்தில் இருப்பவர்கள், தேவர்கள்
சொல் பொருள் விளக்கம்
மேலிடத்தில் இருப்பவர்கள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Those who are seated high, as on horses and elephants, celestials
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோலோர் கொன்று மேலோர் வீசி மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – மது 381-383 கோல் கொண்டு அடக்குவோரைக் கொன்று, மேலே அமர்ந்திருக்கும் பாகரைத் தூக்கி எறிந்து, மெல்லிய பிணிப்பையுடைய வலிய சங்கிலிகளைப் பொருட்டாக எண்ணாமல், அவை கட்டின தறியை முறித்து, கம்பத்தை விட்டுச் சுழலும் கடாத்தையுடைய யானையும் மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர் – பரி 17/8 தேவர்கள் உலகத்தில் உறைவதை வேண்டுபவர் யாரிருக்கக்கூடும்?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்