சொல் பொருள்
விரும்பு, (மனம்) பொருந்து, இயைந்திரு, பொருத்தமாக இரு,
சொல் பொருள் விளக்கம்
விரும்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
like, desire, be harmonious, be fitting
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கணி மேவந்தவள் அல்குல் அம் வரியே – புறம் 344/9 வேங்கைத் தாதினை விரும்பும் இளையவளுடைய அல்குலிடத்தே பரந்த அழகிய வரிகள் – மேவருதல் – விரும்புதல் – ஔவை.சு.து.உரை விளக்கம் இடும்பை யாவதும் அறியா இயல்பினர் மேவர துனி இல் காட்சி முனிவர் முன் புக – திரு 135-137 துன்பம் என்பதை அறியாத தன்மையுடையவர் மனம் பொருந்த வெறுப்பில்லாத ஞானத்தை உடைய முனிவர்கள் முதலில் புகுந்தனர் – ச.வே.சு.உரை மென்தளிர் கொழும் கொம்பு கொழுதி நீர் நனை மேவர நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி – மது 586-588 மெல்லிய தளிர்களைக் கொழுவிய கொம்புகளினின்றும் கொய்து நீர்க்கீழ் அரும்புகளோடே பொருந்துதல் வரக் (பொருத்தமாக இருக்கும்படி) கட்டின நெடிய தொடரையுடைய வடிம்பிலே விழும்படி உடுத்து – பொ.வே.சோ.உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்