Skip to content

சொல் பொருள்

மேவ வேண்டாம், பொருந்தியிருக்க வேண்டாம், கொள்ளவேண்டாம், விருப்பம், ஆசை, பொருந்துதல்

சொல் பொருள் விளக்கம்

மேவ வேண்டாம், பொருந்தியிருக்க வேண்டாம், கொள்ளவேண்டாம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

do not be in, wish, desire, fitting

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பெரும் துனி மேவல் நல்கூர் குறுமகள் – அகம் 229/10

பெரும் வெறுப்பினைக் கொள்ளற்க, தவமிருந்த் பெற்றெடுத்த இளைய மகளே
மேவல் – கொள்ளற்க, மேவற்க – இரா.செயபால் உரை (NCBH)

ஊசல் மேவல் சே இழை மகளிர் – பதி 43/2

ஊஞ்சலாடுவதின் மேல் விருப்பத்தையும் கொண்ட செம்மையான இழை அணிந்த மகளிர்,

புரி மலர் துழாஅய் மேவல் மார்பினோய் – பரி 13/61

முறுக்குடைய மலரையுடைய துளசிமாலை பொருந்துதலையுடைய மார்பினையுடையவனே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *