மைத்துனன் என்பதன் பொருள்மச்சான்
1. சொல் பொருள்
பெ) மச்சான்
1. சொல் பொருள் விளக்கம்
மனைவிக்கு அல்லது கணவனுக்குச் சகோதரன், மாமன் அல்லது அத்தையின் மகன், சகோதரியின் கணவன்
தமிழ் சொல்: அத்தான் (கொழுந்தன்), அளியன்
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
brother-in-law – brother of one’s wife or husband
son of one’s maternal uncle or paternal aunt
sister’s husband
3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
மைத்துனன் ஆகிய பிரமதருமன் - மணி 9/15 மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு - மணி 22/86 மைத்துனன் மனையாள் மறு_பிறப்பு ஆகுவேன் - மணி 22/97
4. பயன்பாடு
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்ற கனாக் கண்டேன் தோழீ நான்
குறிப்பு:
இது ஒரு வடசொல்
நன்றி :