சொல் பொருள்
மேகம் பரவுவது
சொல் பொருள் விளக்கம்
மேகம் பரவுவது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the act of clouds spreading over (the moon)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீயே செய்_வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழ நின் கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே இவட்கே செய்வுஉறு மண்டிலம் மையாப்பது போல் மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே – கலி 7/5-8 நீயோ, இங்கு பொருளீட்டும் காரியத்திற்காகப் பயணம் மேற்கொள்வதை விரும்பி, உன்னுடைய கையால் செய்த வலிமையான வில்லின் நாணை நீவிவிட்டுப் பார்க்கிறாய்; ஆனால் இவளுக்கோ, செம்மையாகச் செய்யப்பட்டது போன்ற முழுநிலவில் மேகம் படர்வது போல் மறு இல்லாத ஒளியையுடைய முகத்தில் பசப்பு பரவத் தொடங்கிற்று;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்