சொல் பொருள்
மொட்டைச்சி – கைம்மையாட்டி
சொல் பொருள் விளக்கம்
கணவனை இழந்த பெண்ணுக்கு ஒரு காலத்தில் மொட்டை போடுதல் வழக்காக இருந்தது. அவ்வழக்கம் அண்மைக்காலம் வரை கூட இருந்தது. அவ்வழக்கமும், குறித்த இன வழக்காகவே இருந்தது. பொது வழக்கன்று. மொட்டைபோடும் வழக்கில் இருந்து, மொட்டை போட்டவளைக் காண்பது செயற்பாட்டுத்தடை (சகுனத்தடை) என்னும் இழிவுக்கு ஆட்படுத்தவும் இடமாயிற்று. சமய வழக்கமாக மொட்டை போடுதல் பல்வேறு சமயங்களில் இடம் பெற்று இந்நாள்வரை கூட நடைமுறையில் உள்ளது. ஆனால் அவை பழிப்பின்பாற்படுத்தப்படுவன அல்ல.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்