சொல் பொருள்
மொண்ணை – கூர்மை இல்லாமை
சொல் பொருள் விளக்கம்
மொட்டை, மழுக்கை என்பவை போன்ற பொருளதே மொண்ணை. முனை அல்லது நுனை மழுங்கிய கருவி மொண்ணை எனப்படும். அவ்வாறே கூர்ப்பில்லாதவன் (மூடன்) மொண்ணையன் எனப்படுவான். இனி ஆண்மைத் திறம் இல்லாதவனும் மொண்ணை எனப்படுவான். அவன் சரியான மொண்ணைப் பயல். அவனுக்கு எதற்குக் குடியும் குடித்தனமும் என ஒதுக்கும் உரையால் அப்பொருள் வெளிப்படும். பேச்சாற்றல் இல்லாத மூங்கையன் மொண்ணையன் எனப்படுதலும் அருகிய வழக்காம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்