சொல் பொருள்
மொய் வைத்தல் – பணம் தருதல்
சொல் பொருள் விளக்கம்
மொய்த்தல் என்பது பலவாக நெருங்குதல், ஈமொய்த்தல் எறும்பு மொய்த்தல் என்பன வழக்குகள். ஒரே வேளையில் பலரும் கூடிச் சேர்ந்து கொடை தருவதால் மொய் எனப்பட்டது. இப்பொழுது ‘மொய்’ப் பணம் எழுத்தாக இருப்பதால் மொய் எழுதுதல் என்னும் வழக்கு உண்டாகியுள்ளது. மொய் என்பது இரங்கல் நிகழ்ச்சித் தொடர்பாகவே நிகழும் பணக் கொடையாம். சுருள் மங்கல நிகழ்ச்சித் தொடர்பாகவே நிகழும் பணக் கொடையாம். இவ்வியல்பு மாறி இரண்டற்கும் இரண்டும் வழங்குவதும் சில இடங்களில் உண்டு.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்