சொல் பொருள்
முகர், மூக்கால் நுகர்,
சொல் பொருள் விளக்கம்
முகர், மூக்கால் நுகர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
smell
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ் விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – கலி 54/7,8 அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை விரலில் ஒழுங்காகச் சுற்றி மோந்துபார்க்கவும் செய்தான்; ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை தூ நீர் பயந்த துணை அமை பிணையல் மோயினள் உயிர்த்தகாலை மா மலர் மணி உரு இழந்த அணி அழி தோற்றம் கண்டே கடிந்தனம் செலவே – அகம் 5/22-26 மார்பில் ஒடுக்கிய தன் புதல்வனின் சிறிய தலையிலுள்ள தூய நீர் தந்த துணையோடு அமைந்த (இரட்டை வடமாகப்)பின்னிய மாலையை மோந்து பெருமூச்சுவிட்ட நேரத்தில், (அதன் வெப்பத்தால்)அந்த சிறந்த மலர்கள் பவளம் போல் ஒளி இழந்து தம் அழகு அழிந்த தோற்றத்தைக் கண்டு தவிர்த்துவிட்டோம் நாம் செல்வதை,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்