சொல் பொருள்
ஓட்டை
சொல் பொருள் விளக்கம்
ஓட்டை என்பது நெல்லை வழக்கில் மோட்டை என வழங்குகின்றது. தண்ணீர் எல்லாம் ஓடிவிட்டது. வரப்பில் மோட்டை உள்ளதா என்பதைப் பார்த்து அடைக்க வேண்டும் என்பர். நண்டு, எலி போட்ட ஓட்டையின் வழியாக தண்ணீர் ஓடிவிடும். ஓட்டை, மோட்டை யாதல் மெய்யொட்டாகும்.
https://youtu.be/_-ELkHwfVxg?t=1879
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
மோட்டை: பெயர்ச்சொல்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண எல்லையை அண்மித்து அமைந்துள்ள ஒரு பூர்வீக தமிழ் கிராமம் ‘புல்மோட்டை’ என அழைக்கப்படுகிறது. இது மிக நெடுங்காலமாகவே இப்பெயருடன் பேணப்படுகிறது. நெல்.வயல் வரப்புக்களில் அறுகம்புல்லின் கிழங்குகள் காரணமாக வரப்பு மண் இறுக்கமடையாத இடத்தினால் துவாரமெடுத்து நீர் வெளியேறும் தன்மை இப்பகுதியின் சிறப்பியல்பாக காணப்பட்டமையால் புல்மோட்டை என பெயர் பெற்றது.