சொல் பொருள்
(வி.அ) 1. எங்கும், எல்லா இடத்திலும், 2. எங்கேயும், எங்கணும்
சொல் பொருள் விளக்கம்
எங்கும், எல்லா இடத்திலும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
everywhere, anywhere
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும் குடி பதிப்பெயர்ந்த சுட்டு உடை முதுபாழ் – அகம் 77/5,6 இடிகளை உமிழும் மழை பெய்யாது நீங்குதலால் எவ்விடத்தும் குடிகள் தத்தம் பதிகளினின்றும் பெயர்ந்து போகற்கு ஏதுவாய பலரும் சுட்டிக்கூறும் மிக்க பாழியமாகிய பாலையில் அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் – அகம் 7/3 சுழன்று திரியும் ஆயத்தாருடன் எங்கும் செல்லாதே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்