சொல் பொருள்
(பெ) 1. புதிய வருவாய், 2. புதிதுபடல்,
சொல் பொருள் விளக்கம்
புதிய வருவாய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fresh income
freshness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் – பொரு 1 இடையறாத புதிய வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து பாணர் வருக பாட்டியர் வருக யாணர் புலவரொடு வயிரியர் வருக என – மது 749,750 பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக, கவியாகிய புது வருவாயினையுடைய புலவரோடு கூத்தரும் வருவாராக’, என்று அழைத்து யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி – சிறு 25 புதிதாய்ப் பூத்தலையுடைய கோங்கின் ஒளிரும் மொட்டுக்களை இகழ்ந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்