சொல் பொருள்
(பெ) அழகு,
சொல் பொருள் விளக்கம்
அழகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
beauty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரி அரி யாணு முகிழ் விரி சினைய மா தீம் தளிரொடு வழையிலை மயக்கி – பரி 10/5,6 வரிகளையுடைய வண்டுகளால் மொய்க்கப்பட்டு அழகிய மொட்டுக்கள் மலர்ந்த கொம்புகளையுடைய மாமரத்தினது காண்பதற்கினிய தளிர்களோடு வாழையின் இலைகளையும் மயக்கி யாணு – அழகு – ”யாணுக் கவினாகும்” – தொல்.சொல்.உரி.82 – பொ.வே.சோ உரை விளக்கம் இந்த ‘யாணு’ என்ற சொல் சில பதிப்புகளில் ‘ஆணு’ என்று பிரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்