Skip to content

சொல் பொருள்

(பெ) கட்டு, கட்டப்பட்டது, கவசம், பின்னல்,

சொல் பொருள் விளக்கம்

கட்டு, கட்டப்பட்டது, கவசம், பின்னல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

tie, bond, that which is tied

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன – நற் 265/4,5

பொலிவுள்ள தோளில் கவசம் மாட்டிய மிஞிலி என்பான் காவல்காக்கும்
பாரம் என்னும் ஊரைப் போன்ற

சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் – நற் 297/7,8

வண்டுகள் மொய்க்கும் அரும்புகளைக் கொத்தித் தூக்கியெறிந்த, கிளறுகின்ற கால்களையுடைய கோழி
முதிர்ந்த மிளகுக்கொடிகளின் பின்னலில் உறங்கிக் கிடக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *